முகப்பு

பேச்சுப்போட்டிகள் 2019 – சுவிஸ்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி 16.11.2019 சனிக்கிழமை பேர்ண், சூரிச் ஆகிய மாநிலங்களில் வலயமட்டமாகவும், 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை சூரிச் மாநிலத்தில் நாடுதழுவிய வகையிலும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கத்துடன் பங்குபெற உழைத்த பெற்றோர்களுக்கும் எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, வெற்றிப்பரிசில்கள் 27.11.2019 புதன்கிழமை பிறைபேர்க் நகரில் இடம்பெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வழங்கப்பெறும். மண்டபத்தின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் தமிழர் நினைவேந்தல் அகவத்தின் தொடர்பகத்தில் தங்கள் வரவைப் பதிவு செய்துகொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி

மேலதிக தொடர்புகளுக்கு:
சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம்,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு