தேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016

தேசிய மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப்போட்டி – 2016

“எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்.”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-

 
புலம்பெயர் தமிழ்சச்pறார்களின் பேச்சாற்றலை வளர்த்தெடுக்கவும் அவர்களிடையே தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கவும் எமது இளந்தலைமுறையினர் மாவீரர்களின் தியாகங்களை அறிந்து அதனை என்றென்றும் போற்றவும் தேசிய மாவீரர் ஞாபகாரத்தப் பேச்சுப்போட்டி நடத்தப்படுகின்றது. பேச்சுப்போட்டிக்கு வயதுப்பிரிவின் அடிப்படையில் விரும்பிய அனைவரும் விண்ணப்பிகக்லாம்.

மாநில மட்டத்தில் நடத்தப்படும் பேச்சுப்போட்டிகள் (5–11வயதுப்பிரிவு)விண்ணப்பிககு;ம்மாணவர் எண்ணிக்கைக்கேற்ப 5 வலயங்களில் நடத்தப்படும். 13 வயது தொடக்கம் 22 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்குமான பேச்சுப்போட்டிகள் நாடுதழுவிய ரதீயில் நடத்தப்படும். வலயமட்டத்தில் நடைபெறும் போடடிக்கு வயதுப்பிரிவின் அடிப்படையில் குறைந்தளவான மாணவர்கள் விண்ணப்பிக்குமிடத்து அப்பிரிவிற்கான போட்டி வேறொரு வலயத்துடன் இணைத்தே நடத்தப்படும்.

தரப்பட்ட பேச்சுக்களில் மாற்றம் செய்தல் அல்லது வேறு பேச்சுக்களைப் பேசுதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

21, 22 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் ஆகிய வயதுப்பிரிவினர் சுயமாக அல்லது தங்களுக்கு அறிமுகமானவர்களுடன் இணைநது; பேச்சினைத் தயாரிக்க வேண்டும். (நேரம்: 8-10 நிமிடங்கள்).

விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வலயமட்டப் போடடி; நிலையங்கள் தீர்மானிக்கப்பட்டு 19.11.2016 சனிக்கிழமை போடடி நடைபெறும். 13, 15, 17, 19, 21, 22 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் ஆகிய வயதுப்பிரிவினருக்கான போடடி 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் நகரில் நடைபெறும். பங்குபற்றும் அனைவருக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழும் நினைவுப்பரிசும் வழங்கப்படுவதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் 27.11.2016 ஞாயிற்றுக்கிழமை பிறிபேர்க் நகரில் நடைபெறும் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் வைத்து வழங்கப்படும்.


பேச்சுப்போட்டியில் பங்குபற்றுபவர்கள் தங்கள் வயதுப்பிரிவிற்குரிய பேச்சினை தமிழர் நினைவேந்தல் அகவத்தின் www.maveerarnal.ch என்ற இணையத்தளத்திலும் “தமிழர் நினைவேந்தல் அகவம்” எனும் முகப்புத்தகத்திலும் தமிழ்ப்பள்ளி முதல்வர்களிடமும் பெற்றுக்கொளள்லாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி: 09.11.2016 புதன்கிழமை

போட்டிக் கட்டணம்: 15 CHF, பிந்திய விண்ணப்பக் கட்டணம்: 25 CHF

மாணவர்கள் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தினையும் போடடிக் கடட்ணத்தினையும் வகுப்பாசிரியர் / தமிழ்ப்பள்ளி முதல்வரிடம் வழங்குதல் வேண்டும். கல்விச்சேவையால் நடத்தப்பட்ட

பொதுப்பரீட்சைக்கு இதுவரை தோற்றாத மாணவர்களும் ஏனையவரக்ளும் தங்கள் வதிவிட அனுமதிப்பத்திரத்தின் பிரதியினையும் போடடி;க்கடட்ணம் செலுத்திய பிரதியினையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்பிவைகக் ப்படவேண்டிய முகவரி:
Tamilar Remembrance Foundation – Swiss
Postfach 439
4528 Zuchwil.தபாற்கணக்கு இலக்கம்: 60 – 34553 – 3
தொடர்புகளுக்கு: 076 528 71 12, 076 426 27 80, 077 911 89 58

விண்ணப்பபடிவத்தை தரையிறக்கவும்