எழுச்சிக்குயில் 2017 – எழுச்சிப்பாடல் போட்டி

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்து கலைஞர்களினதும் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம்; நான்காவது தடவையாக நடாத்தும் எழுச்சிக்குயில் 2017

போட்டி விதிமுறைகள்

 • காந்தள் எழுச்சிக்குயில், செண்பகம் எழுச்சிக்குயில், வாகை எழுச்சிக்குயில், சிறுத்தை எழுச்சிக்குயில், வளர்ந்தோர் எழுச்சிக்குயில் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடாத்தப்பட்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு எழுச்சிக்குயில் – 2017 என்னும் விருது வழங்கி மதிப்பளிக்கப்படுவதுடன் மாவீரர் நாள் 2017 நிகழ்வில் பாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படும்.
 • ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் போட்டியாளர்கள் மதிப்பளிக்கப்படுவர்.
 • போட்டியாளர் தெரிவுசெய்யும் பாடல் தமிழீழ எழுச்சிப்பாடலாக இருத்தல் வேண்டும்.
 • தெரிவுசெய்யப்பட்ட பாடலை போட்டியாளர் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவாக அனுப்பிவைத்தல் வேண்டும்.
 • போட்டிக்கு விண்ணப்பித்த போட்டியாளர் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்படும் திகதியில் பாடல் ஒத்திகைக்காக வருகைதரல் வேண்டும்.
 • போட்டியாளர் ஒருவர் தெரிவு செய்த பாடலை இன்னொரு போட்டியாளர் (எந்தப் பிரிவிலும்) தெரிவுசெய்ய அனுமதிக்கப்படமாட்டாது. முதலில் பாடலை தெரிவுசெய்து அனுப்பியவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
 • நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

வயதெல்லை

 • காந்தள் எழுச்சிக்குயில்    (01.01.2008 – 31.12.2010 வரையில் பிறந்தோர்)
 • செண்பகம் எழுச்சிக்குயில்    (01.01.2005 – 31.12.2007 வரையில் பிறந்தோர்)
 • வாகை எழுச்சிக்குயில்    (01.01.2002 – 31.12.2004 வரையில் பிறந்தோர்)
 • சிறுத்தை எழுச்சிக்குயில்    (01.01.1997 – 31.12.2001 வரையில் பிறந்தோர்)
 • வளர்ந்தோர் எழுச்சிக்குயில்    (01.01.1997 இற்கு முன் பிறந்தவர்கள்)
 • இணை எழுச்சிக்குயில்    (இரு குரல் – வயதெல்லை இல்லை)

 

விண்ணப்ப முடிவுக்திகதி    : 15.05.2017 திங்கட்கிழமை
போட்டி நடைபெறும் திகதி    : 24.06.2017 சனிக்கிழமை
விண்ணப்பக்கட்டணம்        : 30 ஊர்கு, இணை எழுச்சிக்குயில் ஒருவருக்கு 20 ஊர்கு

போட்டி நடைபெறவுள்ள முகவரி:
Kronenmattsaal, Kronenweg 16, 4102 Binningen

விண்ணப்பக்கட்டணம் செலுத்தவேண்டிய தபாற்கணக்கு இலக்கம்:
60 – 34553-3, TRF Swiss, 4528 Zuchwil.

 

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
Tamilar Remembrance Foundation, Post Fach 439, 4528 Zuchwil.

தொடர்புகளிற்கு:   www.maveerarnaal.ch, ezhuchchikuyil@gmail.com,
முகநூல் முகவரி:   www. facebook.com/ezhuchchikuyil
தொலைபேசி இலக்கம்: 076 426 27 80, 076 528 71 12,  078 880 83 19

விண்ணப்பபடிவத்தை தரையிறக்கவும்